செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி (5-வது கட்ட போட்டி) அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 37-வது நகர்த்தலில் டிரா செய்தார். கடைசி சுற்று முடிவில் வெஸ்லி சோ, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 5% புள்ளிகளுடன் சம நிலை வகித்ததால், சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்க டைபிரேக்கர் (ஆர்மகேட்டான்) முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் இரண்டு ரேபிட் ஆட்டமும் 'டிரா'வில் முடிந்ததால் மறுபடி யும் சமநிலை நீடித்தது. இதனால் 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், வெஸ்லி சோ கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடுபவருக்கு 5 நிமிடமும், கருப்பு நிற காய்களுடன் ஆடுபவருக்கு 4 நிமிடமும் வழங்கப்படும். ஆட்டம் டிராவில் முடிந்தால் கருப்பு நிற காய்களு டன் ஆடுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த விதிமுறையின் படி நடந்த கடைசி ஆட்டமும் டிராவில் முடிந்ததால் (1.5-1.5 புள்ளி) கருப்புநிற காய்களுடன் ஆடிய வெஸ்லி சோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/sinquefield-cup-chess-indian-player-praggnanandhaa-finishes-second




