சென்னை, ரூ. 46 கோடி செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் முடிவு செய்துள்ளனர். செக் மோசடி புகார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா மீது தனது கையெழுத்திட்ட காசோலைகளை (செக்) திருடி ரூ.46 கோடியளவில் பண மோசடி செய்ய முயன்றதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை மறுத்த நடிகை அம்பிகா, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். ராதாவிடம் போலீசார் விசாரணை இந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி பிரிவுக்கு நடிகை ராதா நேற்று பிற்பகல் 3 மணியளவில் வந்தார். அங்கு விசாரணை அதிகாரி ஜரினா முன்னிலையில் ராதாவிடம் விசாரணை நடைபெற்றது. 3 மணி நேரம் விசாரணை இதில் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்த விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகை ராதா மாலை 6.10 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அம்பிகாவை விசாரிக்க போலீசார் முடிவு ரூ. 46 கோடி செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் முடிவு செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/check-fraud-complaint-police-decide-to-summon-actress-ambika-for-questioning




