பாரீஸ், அவசர கால இருப்புப் பெட்டகங்களில் இருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தைக்கு வெளியிட ஜி7 நாடுகள் கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு குறைந்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 8 மாதங்களாக நீடித்து வரும் போர் சூழல் காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் வினியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகளால் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் விலை உலகளவில் புதிய உச்சத்தைத் தொட்டது. அமெரிக்கா எச்சரிக்கை இந்த சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தைக்கு திறந்துவிடத் தவறினால், அமெரிக்காவில் இருந்து டீசல் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஐரோப்பா நாடுகள் தங்களின் பாதிக்கும் மேற்பட்ட டீசலுக்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதால், டிரம்ப் அறிவித்த தடை உடனடியாக அந்த நாடுகளின் எரிபொருள் சந்தையில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. டீசல் விலை உயர்வு கச்சா எண்ணெயை டீசலாக மாற்றுவதற்கான கூடுதல் சுத்திகரிப்புக் கட்டணம் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்க்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.9,600 (100 அமெரிக்க டாலர்) எகிறியது. இந்த தட்டுப்பாட்டு பயத்தால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விலை ஒரே வாரத்தில் 40 சதவீதம் வரை அசுர வேகத்தில் உயர்ந்தது. ஜி7 நாடுகள் ஒப்புதல் சர்வதேச அளவில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தங்களின் அவசர கால இருப்புப் பெட்டகங்களில் இருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வெளியிட ஜி7 நாடுகள் கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடை பெற்ற ஜி7 நாடுகளின் அவசரக் காணொலி மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, இந்த அவசர கால கச்சா எண்ணெய் வெளியீடு உடனடியாக தொடங்கி, அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டைக் குறைக்க, முதற்கட்டமாக முதல் 20 நாட்களிலேயே ஒரு பெரிய பகுதி சந்தைக்கு கொண்டுவரப்படும். பாரீஸ் நகரை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச எரிசக்தி முகமை இந்த ஒட்டுமொத்த பங்கீட்டையும் உலகளவில் கண்காணித்து வழிநடத்தும். பெட்ரோல், டீசல் விலை இந்த அதிரடி வெளியீட்டின் மூலம் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு குறைந்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நடவடிக்கை எரிபொருள் சந்தையில் நிலவும் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/g7-nations-approve-release-of-100-million-barrels-of-crude-oil-to-global-market-petrol-diesel-prices-likely-to-fall




