தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், 'விஜய்தான் அடுத்த பிரதமர்' எனக் கூறினார். தவிர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, "இன்றைய CM. வருங்கால PM. வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே பயணிப்போம்" என்று பேசினார். மாணிக்கம் தாகூர் இதைக் குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், ``அவர்கள் கருத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸை சீண்டுகிறதா? தவெக. என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின. இந்நிலையில் தவெக தரப்பில் சில நிர்வாகிகளிடம் பேசினோம். "அரசியல் இயக்கங்களில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் தலைவர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அதை ரசிகர் மன்ற மனநிலை என்று எளிதாகக் கடந்துபோய்விட முடியாது. ஒரு புதிய அரசியல் கட்சி உருவாகும்போது, அதன் தொண்டர்களுக்கு இருக்கும் எழுச்சியும் எதிர்பார்ப்பும்தான் கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை சக்தியாக இருக்கிறது. நாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து அமைதியான முறையிலும் ஜனநாயகப் பாதையிலும் பயணிக்க விரும்புகிறோம். வட இந்தியாவில் எங்கள் தலைவருக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. மக்களின் உண்மையான தேவைகளுக்காகவும் மாற்றத்திற்காகவும் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதில் மட்டுமே எங்களது கவனம் முழுமையாக இருக்கிறது. முதல்வர் விஜய் மூத்த தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அதேவேளையில் மக்களுக்கான எங்களது பணிகளே தவெகவின் அரசியல் முதிர்ச்சியை வரும் காலத்தில் வெளிப்படுத்தும். கட்சி தலைவர்கள் தங்களின் தொண்டர்களை உற்காகப்படுத்த பல்வேறு கருத்துகளை தெரிவிப்பது வழக்கமானது தான். காங்கிரஸ் கூட கடந்த ஆட்சி காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த போது, `தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்றார்கள். அது திமுக ஆட்சிக்கு எதிரான கருத்து என்று எடுக்க முடியுமா? கூட்டணி கணக்குகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் இருக்கும் நிலவரங்கள் அடிப்படையில் எடுக்க கூடிய முடிவுகள். இது நாடாளுமன்ற தேர்தல் சீசன் இல்லை. இன்னும் அதற்கு காலம் இருக்கிறது. அப்போது எங்களின் தலைவர் முடிவு செய்வார்." என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/vijay-as-future-pm-ministers-speak-is-tvk-targeting-congress




