சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். 'விஸ்வநாத் & சன்ஸ்' அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, "2015-ல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சூர்யா சார் கேரளாவில் உள்ள லூலு மாலிற்கு வந்தார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் 11-ம் வகுப்பு படித்துகொண்டிருந்தார். என் அண்ணனும், அவரது நண்பர்களும் லூலு மாலிற்குச் சென்று சூர்யா சாரைப் பார்த்தார்கள். என்னால் செல்ல முடியவில்லை. நான் அழுதுகொண்டிருந்தேன். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அங்கு செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதனால் அம்மா, அப்பா என்னை விடவில்லை. என் அண்ணன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். மமிதா பைஜூ எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள லூலு மாலில் சூர்யா சாருடன். அவருடைய படத்தில் நடித்து இங்கு வந்து நிற்கிறேன். இது எனக்கு ஒரு மிகப்பெரிய பாக்கியம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். Viswanath & Sons: "'கஜினி' படத்துல இருந்தே சூர்யா சார் மேல க்ரஷ்!" - மமிதா பைஜூ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/mamitha-baiju-about-surya-in-vishwanath-sons-movie-event




