அபுஜா நைஜீரியாவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாகாணத்தின் கவுரா பகுதிக்கு உட்பட்ட நரிடான் கிராமத்தில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்தது. கொடூர தாக்குதல் அந்த கும்பல் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் இந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெற்கு கடுனா அமைதி மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க் அமைப்பின் தலைவர் தெரெக் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/nigeria-marma-kumbal-thuppakki-soodu-30-per-pali




