புவனேஸ்வர், வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவில் உள்ள சுந்தர்கர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலட்ர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 19 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தொடர் கனமழை வெள்ளத்தால் ஒடிசாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஒடிசாவில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்சபன்சா மற்றும் கேமியா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலந்தி, வைதரணி ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை தாண்டியுள்ளது. மேலும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பாலசோர் நகரில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மகாநதி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, புகழ் பெற்ற பட்டாரிக்கா கோவில் வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில மீட்பு குழுவினர் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கும் புயல் நிவாரண முகாம்களுக்கும் அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/continuous-heavy-rain-in-odisha-rivers-in-spate-residential-areas-submerged




