Vollständiger Artikel
தமிழகமெங்கும் ஐயனார் கோயில்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஐயன், ஐயனார், சாஸ்தா என்றெல்லாம் கொண்டாடப்படும் இவர் பூரணா புஷ்கலா என்னும் தன் தேவியருடன் காட்சி தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தர்மத்தின் வடிவமாகக் கருதப்படும் இந்தச் சாஸ்தாவை வழிபட்டால் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும். குறிப்பாக திருமணப்பேறு, குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பார் ஐயனார். அப்படி ஒரு தலம்தான் சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து கல்லல் மார்க்கமாக சிவகங்கை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆதினமிளகி ஐயனார் கோயிலின் வளைவு வரை செல்கின்றன. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ஆதினமிளகி ஐயனார் கோயில் இங்கு இரண்டு சேமக்குதிரைகளின் நடுவில் பூரணா மற்றும் புஷ்கலா தேவியருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஆதினமிளகி ஐயனார். இந்த ஐயனார் குறித்துத் தலவரலாறு சொல்லும் தகவல் சுவாரஸ்யமானது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்: வினைகள் தீர்க்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சந்நிதி! 1876 - ம் ஆண்டுகளில் (தாது வருடம்) ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது, சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை எனும் கிராமத்தில் இருந்த மக்கள், அருகிலிருந்த எட்டு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர். அப்போது, அப்பகுதியின் பஞ்சத்தைப் பார்வையிட வந்த சிவகங்கை மன்னர், கீழக்கோட்டை பகுதியில் குடிசை அமைத்து, கண்ணாங்குடி என்னும் விவசாய கண்மாயை ஏற்படுத்தியதோடு, அதற்குக் காவலாகவும், ஊர் செழிக்கவும் புலம்பெயர்ந்த மக்களின் குல தெய்வமான, 'ஆதினமிளகி ஐயனார்' கோயிலைக் கட்டியதாகத் தலவரலாறு சொல்கிறது. இந்தக் கோயிலின் அருகிலேயே சிவகங்கை மன்னரின் குலதெய்வமான பொக்கிஷக் கோட்டை காளியின் கோயிலும் அமைந்திருக்கிறது. ஐயனாரை நம்பினால் கைவிடுவாரா... ஊர் மீண்டும் செழித்தது. என்றைக்கு மன்னர் இந்தக் கோயிலைக் கட்டினாரோ அதன்பிறகு, அங்கே பஞ்சமே ஏற்பட்டதில்லை என்கிறார்கள் ஊர்மக்கள். அதனால்தான் இந்த ஐயனாரை வழிபட்டுச் சென்றால் வாழ்வில் உணவுப்பஞ்சமே ஏற்படாது என்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் கண்ணாங்குடிக் கால்வாயில் மீன்களைப் பிடிப்பதற்கும் ஒரு வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கின்றனர் அங்குள்ள மக்கள். ஆண்டுதோறும் கண்ணாங்குடிக் கால்வாயில் சித்திரை மாதம் நீர் வற்றும் காலத்தில், ஏழு மண் பானைகளில் மீன்களைப் பிடித்து, ஐயனார் கோயில் அருகில் உள்ள சேங்கை என்னும் குளத்தில் விட்டுவிட்டு, அதன் பிறகே கண்மாயில் மீன் பிடிக்கிறார்கள். இதனால், ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் வராது என்பது மக்களின் நம்பிக்கை. மகாசிவராத்திரி நாளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், அனைத்துக் குடும்பக் கஷ்டங்களும், பணப்பற்றாக்குறையும் நீங்கும் என்பது நம்பிக்கை. தர்மசாஸ்தா நம்மை கம்பீரமான ராஜகோபுரம் வரவேற்கும். அதை வணங்கு ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் பூரணா புஷ்கலா தேவியர் சமேதராக ஆதினமிளகி ஐயனாரைத் தரிசனம் செய்யலாம். கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஐயனின் தோற்றமே நம்மைப் பரவசப்படுத்தும். கவலைகளை மறக்கச் செய்யும். ஒருமுறை தரிசித்துவிட்டால் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் பிறக்கும். அப்படி ஒரு சாந்நித்தியம் அந்தச் சந்நிதானத்துக்கு. இந்த ஆலயத்தில் அகோர வீரபத்திரர், பைரவர், சின்னக்கருப்பர் மற்றும் பெரிய கருப்பர், கண்ணாங்குடியார், நீலி அம்மன், சப்த கன்னியர் ஆகியோரும் தனிச் சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் திருக்கோயில்: நாக தோஷம் தீர்க்கும் சந்நிதி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




