சென்னை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். மருத்துவமனை விளக்கம் இந்த நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை தொடர்பாக பரவும் காணொலி ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலிகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறான தகவல் ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் காணொலி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அரசின் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-hospital-egg-controversy-clarification-issued-that-the-viral-video-is-old




