மும்பை, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அப்பால் பலரும் அறியாத சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 1. 'தோனி' என்பது உண்மையான குடும்பப்பெயர் இல்லையா? சில தகவல்களின்படி, தோனியின் உண்மையான குடும்பப்பெயர் "தௌனி" (Dhauni) என்றும், பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ஆவணங்களில் ஏற்பட்ட எழுத்து பிழையால் அது 'தோனி' என பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவலாக பேசப்பட்டாலும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. 2. சச்சினின் ரசிகராக தொடங்கிய பயணம் சிறுவயதில் தோனியின் கிரிக்கெட் ஹீரோ சச்சின். சச்சினின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்ட தோனி, தனது அறையில் சச்சினின் போஸ்டர்களை ஒட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், தனது சிறுவயது ஹீரோவுடன் இந்திய அணிக்காக இணைந்து விளையாடியதோடு, 2011 உலகக் கோப்பை வெற்றியையும் அவருடன் பகிர்ந்துகொண்டது அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. 3. நீளமான தலைமுடிக்கு பின்னால் இருந்த இன்ஸ்பிரேஷன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, தோனியின் நீளமான தலைமுடி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூட அவரது ஹேர்ஸ்டைலை பாராட்டியிருந்தார். அதற்கு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தான் தனது இன்ஸ்பிரேஷன் என்று தோனி பின்னர் தெரிவித்திருந்தார். 4. 7-ம் எண் ஜெர்சிக்கு பின்னால் இருந்த காரணம் தோனியின் 7-ம் எண் ஜெர்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த எண்ணை அவர் எந்த அதிர்ஷ்டத்திற்காகவும் தேர்வு செய்யவில்லை. ஜூலை 7-ம் தேதி (7/7) பிறந்ததால், தனது பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலேயே அந்த எண்ணை தேர்வு செய்திருக்கிறார். 5. பழைய பைக்கில் தொடங்கிய பயணம் தோனிக்கு பைக்குகள் மீது இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. இன்று அவரது கேரேஜில் பல அரிய மற்றும் விலையுயர்ந்த பைக்குகள் உள்ளன. ஆனால், தனது ஆரம்பகால வருமானத்தில் அவர் வாங்கிய முதல் வாகனம் ஒரு செகண்ட்-ஹேண்ட் பைக். அந்த பழைய பைக்கில் தொடங்கிய பயணம், இன்று உலகின் மிக விலையுயர்ந்த பைக்குகளை சொந்தமாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 6. இந்திய அணிக்குள் அழைத்து சென்ற மின்னல் ஆட்டம் 2004-ம் ஆண்டு துலீப் டிராபி போட்டியின்போது, தேர்வுக்குழு தலைவர் கிரண் மோர் தோனியின் ஆட்டத்தை கவனித்தார். அவரது வித்தியாசமான விக்கெட் கீப்பிங், அதிரடி பேட்டிங் மற்றும் அச்சமில்லாத அணுகுமுறை ஆகியவை தேர்வாளர்களை கவர்ந்தன. அதன் பலனாக, அதே ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பை தோனி பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/ms-dhoni-from-spelling-mistakes-to-posters-on-the-walls-these-are-5-secrets-in-dhonis-life-that-no-one-knows




