ஒட்டாவா கனடாவில் இசை திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் பலியானார்கள். கனடாவின் டொராண்டோ நகரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை இரவில் சல்சா ஆன் செயின்ட் கிளேர் என்ற புகழ்பெற்ற லத்தீன் கலாசார திருவிழா நடந்தது. வீதி திருவிழாவான இந்த உள்ளூர் திருவிழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி வந்து தெருக்களில் வலம் வந்து கொண்டாடினர். துப்பாக்கி சூடு அப்போது செயின்ட் கிளேர் தெரு மற்றும் ஆர்லிங்டன் தெரு அருகே மர்மகும்பல் ஒன்று, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியது. இதனால் கச்சேரிக்கு வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் இளம்பெண்கள் உள்பட 8 பேர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். இதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டனர். பிரதமர் இரங்கல் இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், விசாரணையையும் தொடங்கினர். சம்பவம் பற்றி நகர கவுன்சிலர் ஜோஷ் மத்லோ கூறும்போது, இசை திருவிழாவில் துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக நேற்று நடக்க இருந்த இறுதி நாளுக்கான திருவிழா ரத்து செய்யப்பட்டது என்றார். இந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி இரங்கல் தெரிவித்து கொண்டார். துணிச்சலாக செயல்பட்டு, பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்ததற்காக போலீசாரையும் அவர் பாராட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/canada-shooting-at-music-festival-2-youths-killed-prime-minister-condoles




