தென்காசி, சாரல் திருவிழா குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா, குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தொடர்ந்து கடையம், கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகம், காவடி, மயிலாட்டம் போன்றவை நடைபெறுகிறது. கலைநிகழ்ச்சிகள் 1-ந்தேதி காலை 10 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டி, காலை 11 மணிக்கு யோகாசனம் மற்றும் ஆணழகன் போட்டி, நண்பகல் 12 மணிக்கு குருவிகுளம் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், பிற்பகல் 2 மணிக்கு செல்ல நாய்கள் கண்காட்சி, மாலை 4.30 மணிக்கு பல்கிஷ் கிராமியக் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினர் பரதநாட்டியம், மாலை 5 மணிக்கு ஹரிணி வழங்கும் மேஜிக் ஷோ, மாலை 5.30 மணிக்கு முத்துச்சந்திரன் கலைக்குழு தோல்பாவை கூத்து நடக்கிறது. மாலை 6 மணிக்கு மொறப்பூர் பாரதி கிராமிய கலைவளர்ச்சி மையம் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மதுரை பாலா கலைக்குழுவினர் கரகாட்டம், திருநங்கைகள் பங்குபெறும் பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தென்காசி, ஐயம்மாள் கலைக்குழு வில்லிசை, சென்னை, ஏஞ்சல் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, அபிநயகீதம் குழுவினர் திரைப்பட மெல்லிசை நடை பெறும். இதேபோன்று வருகிற 5-ந்தேதி வரையிலும் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/saaral-thiruvizhaa-begins-tomorrow-in-courtallam




