சென்னை, ‘ஒன் மேன்’ படத்தின் முயற்சியை அறிந்த நடிகர் சிலம்பரசன், சங்ககிரி ராஜ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியிலும் அவரது முயற்சியை கவனித்து, நேரில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தனி ஒருவராக உருவான ‘ஒன் மேன்’ ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார், தனது புதிய முயற்சியாக ‘ஒன் மேன்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதை, இயக்கம், பின்னணி பணிகள் என திரைப்படம் உருவாகத் தேவையான பல்வேறு துறைகளையும் ஒருவராகவே கையாண்டுள்ளார். கடந்த 21-ம் தேதி வெளியான படம் வித்தியாசமான முயற்சியாக உருவான ‘ஒன் மேன்’ திரைப்படம் கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலக சினிமா வரலாற்றில் தனி மனிதராக ஒரு முழு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியாக இப்படம் கவனம் பெற்றது. இருப்பினும், வெளியான பிறகு ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. வேதனையை வெளிப்படுத்திய இயக்குநர் இதனால் வேதனை அடைந்த சங்ககிரி ராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். தனது திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் போதிய உதவி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், சினிமாவிலிருந்து விலகி விவசாயம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு இந்த நிலையில், ‘ஒன் மேன்’ படத்தின் முயற்சியை அறிந்த நடிகர் சிலம்பரசன், சங்ககிரி ராஜ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியிலும் அவரது முயற்சியை கவனித்து, நேரில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். “உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது” சினிமாவின் பல்வேறு துறைகளையும் ஒரே நபராக கையாண்டு திரைப்படம் உருவாக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் முயற்சியை சிம்பு பாராட்டியுள்ளார். தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சங்ககிரி ராஜ்குமார் வேதனை தெரிவித்திருந்த நிலையில், சிம்புவின் இந்த நேரடி பாராட்டு அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/will-the-film-one-man-gain-recognition-simbu-personally-appreciates-sangagiri-rajkumar



