புதுடெல்லி, ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு நீண்ட நேரமாகியும் வராததால் தேடி சென்ற பார்த்தபோது டெலிவரி ஊழியர் அந்த உணவை வேறு இரண்டு நபர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், அவர்கள் அந்த உணவை சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ந்து போனார். பசிக்கு வந்த சோதனை டெல்லியை சேர்ந்த ரிஷப் கௌசிக் என்பவர், பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம்' மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் ஆர்டர் செய்த உணவு கைக்கு வந்து சேரவில்லை. இதனால் பசியில் இருந்த அவர், அந்த நிறுவனத்தின் செயலியில் டெலிவரி பாய் எங்கு வருகிறார் என்று கண்காணித்தார். அப்போது, டெலிவரி ஊழியர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நகராமல் நிற்பதை காட்டியுள்ளது. நேரில் சென்ற வாடிக்கையாளர் ஏன் இவ்வளவு நேரமாக ஒரே இடத்தில் நிற்கிறார் என்ற சந்தேகத்தில், ரிஷப் கௌசிக் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க முடிவு செய்தார். செயலி காட்டிய இடத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த காட்சியை கண்டு உறைந்து போனார். 100 ரூபாய்க்கு விற்ற ஊழியர் சந்தேகமடைந்து அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, டெலிவரி ஊழியர் அந்த உணவை வேறு இரண்டு நபர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், அவர்கள் அந்த உணவை சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ந்து போனார். சமூக வலைத்தளங்களில் வைரல் தொடர்ந்து, இந்த மோசமான அனுபவத்தை ரிஷப் கௌசிக் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக பகிர்ந்து, ஜோமாட்டோ நிறுவனத்தின் மீதான தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/delivery-worker-sells-customers-food-for-100-rupees




