திண்டுக்கல், 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சேப்பாக் - சேலம் இந்நிலையில், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 182 ரன்கள் குவிப்பு இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹரிஷ் குமார் அதிகபட்சமாக 57 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் கழத்தில் இருந்தார். சேப்பாக் தரப்பில் அந்த அணியின் பிரேம் குமார், சிலம்பரசன் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சேப்பாக் வெற்றி இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஹரிஹரன், கேப்டன் ஜெகதீசன் களமிறங்கினர். மோகித் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆஷிக் 7 ரன்னிலும், அரவிந்த் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த ஸ்வப்னில் சிங் உடன் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெகதீசன் 39 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஸ்வப்னில் 45 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் சேப்பாக் 16.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேலம் ஸ்பார்டன்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-chepauk-stun-salem-for-big-win




