திருநெல்வேலி, நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல், குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2 பேருக்கு நீதிமன்ற காவல் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் மகன் மணிமாறன்(எ) மணி (வயது 20), ராஜையா மகன் சுபாஷ்(26) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல் இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் இன்று (6.8.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 86 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 86 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/86-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year




