புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதுச்சேரியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தற்போது தமிழ்நாட்டிலும் எங்கள் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை விரும்பியே புதிய சக்தியை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழவே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. முதல்வர் விஜய் குறிப்பாக போதைப்பொருட்கள் புழக்கம், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் சிவகங்கையில் நடந்த இரட்டைக்கொலை போன்ற சம்பவங்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற ஆட்சி என்று கூறிக்கொண்டே துறைசார்ந்த பல திட்டங்களில் முறைகேடுகள் நடக்கிறது. மதுபானக் கொள்கை மற்றும் புதிய நிறுவனங்களுக்கு ஆணை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. விளையாட்டுத் துறையில் அடிப்படை வசதிகளே இன்னும் முழுமையடையாத நிலையில், கோடிக்கணக்கில் செலவிட்டு ரேஸ் டிராக் (Race Track) அமைப்பது தேவையற்ற ஒன்று. இங்குள்ள நிறுவனங்களை வெளிநாடு சென்று சந்தித்து ஒப்பந்தம் செய்து, கணக்கு காட்டப்படுகிறதே தவிர, புதிய முதலீடுகள் பெரிய அளவில் வரவில்லை. தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் தனிநபர் விமர்சனங்களிலேயே நேரத்தை விரயம் செய்கிறார்கள். எனவே, மக்கள் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான அரசியலை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம்." என்றார். "எனக்கு போன் பண்ணாரு; நான் 'அதை' எதிர்பார்க்கவே இல்ல" - முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/jose-charles-martin-has-stated-that-multiple-power-centers-have-now-emerged-in-tamil-nadu



