ஹார்முஸ் நீர்ச்சந்தியில் சுங்க வரி வசூலிப்போம் என்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால், இதில் மற்ற நாடுகளுக்கு உடன்பாடு இல்லை. காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாகவே அமைந்த உலகத்திற்கான பொது சொத்து ஆகும். ஆனால், பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றத்தில் ஈரான் தூதர் அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்." - அமைச்சர் நிர்மல் குமார் இது குறித்து அவர் பேசியுள்ளதாவது. "ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் நாட்டின் எல்லையோரக் கடல் பகுதியின் ஒரு அங்கமாக இருப்பதால், அங்குப் பயணிக்கும் கப்பல்களுக்கு நாங்கள் நிச்சயமாகச் சேவை கட்டணம் வசூலிப்போம். இந்த நடவடிக்கையை 'சுங்கக் கட்டணம்' என்று குறிப்பிடக் கூடாது. இந்த புதிய ஏற்பாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியிலான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் மட்டுமேயாகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடத்திற்கான புதிய ஏற்பாடுகள் குறித்தும், அங்கு அதிகளவிலான கப்பல்கள் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஈரான் தற்போது ஓமனுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கடினமான காலங்களில் எங்களுக்குத் துணையாக நின்று, எங்களுடன் நட்புப் பாராட்டிய நாடுகளுக்கு இந்தச் சேவை கட்டணத்தில் சில சிறப்புச் சலுகைகளை வழங்குவது குறித்து நாங்கள் நிச்சயமாகப் பரிசீலிப்போம்." 'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/iran-says-hormuz-strait-charges-will-fund-security-and-monitoring


