கோவை, கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும் என கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் முதல் மாற்றம் தந்த மக்களுக்காக, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியைத் தந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடனும், பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடனும்,கவுண்டம்பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் எனக்கு அளித்த இந்தப் புனிதமான பணியில் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறேன்!கடந்த 100 நாட்களில்… 953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு 30,000+ அன்பு மக்களை நேரில் சந்தித்து, 1,317 கோரிக்கை மனுக்களைப்பெற்று, உங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரில் கேட்டறிந்துள்ளேன்.அவற்றில் 953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, உங்கள் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். மேலும், 323 இடங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இந்த 100 நாள் சாதனைப் பயணம் என்பது வெறும் எண்களின் கணக்கு அல்ல… உழைப்பதே என் லட்சியம் தொகுதி மக்களின் ஒவ்வொரு தேவையையும் கேட்டறிந்து, உரிய நலத்திட்ட உதவிகளையும் தீர்வுகளையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்த என் மக்கள் பணியின் சான்று!எனக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்த ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றுவது என் கடமை! உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், மக்கள் பிரதிநிதியாகவும், எந்நாளும் உங்கள் தோளோடு தோள் நின்று உழைப்பதே என் லட்சியம்! கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும்! என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/changeand-the-work-of-the-peoplewill-continue-with-greater-dignity-kanimozhi-santosh-mla




