சென்னை, சென்னையில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மை பணி மேற்பார்வையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் சென்னை சைதாப்பேட்டை டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), தனியார் தூய்மை பணி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோதமேடு பகுதியில் கடைக்கு தயிர் வாங்க வந்திருந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. தூய்மை பணி மேற்பார்வையாளர் போக்சோவில் கைது சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். ஜெயச்சந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். ஜெயச்சந்திரனை சைதாப்பேட்டை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cleaning-supervisor-arrested-under-pocso-for-sexually-assaulting-10-year-old-girl



