புதுடெல்லி, 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரர் லக்ஷயா சென், அமெரிக்காவின் காரெட் டேனை எதிர்கொண்டார். கடைசி புள்ளி வரை நீயா-நானா? என திரில்லிங்காக நீடித்த இந்த மோதலில் லக்ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிக்குள்ளானார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய 'இளம் புயல்' ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற நேர் செட் டில் இலங்கையின் அபேவிக்ரமாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையரில் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கால்பதித்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட்டில் கனடாவின் வென் யு ஜாங்கை 35 நிமிடங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3-வது சுற்றை எட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/world-badminton-championships-pv-sindhu-advances-to-the-third-round




