சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு, பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. வாகன விபத்து டேங்கர் லாரி மோதிய வேகத்தில் கார் முற்றிலும் சிதைந்து நொறுங்கியது. இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணித்த கணவர் முகிலன், ஈஸ்வரன், திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமாவை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/accidents/6-died-in-tiruppur-car-accident




