டிஜிபின் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பின்கோடு இருப்பிடத்தில் இருந்து ஜி.பி.எஸ். மூலம் துல்லியமாக இடத்தை கண்டறிந்து பின் கோடு உருவாக்கி கொடுக்கும் வசதியாகும் பின்கோடு எண் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தபால்துறையில் ஒவ்வொரு பகுதிக்கும் 6 இலக்க எண் வழங்கப்பட்டது. அதாவது 'போஸ்டல் இன்டக்ஸ் எண்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒவ் வொரு எண்ணும் அந்த மாநிலம். மாவட்டம், பகுதி. தபால்நிலையம் ஆகியவற்றை குறிக் கிறது. முகவரி தெளிவாக இல்லாவிட்டாலும் கூட, பின்கோடு எண் மூலம் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்துக்கு தபால்கள் சென்றுவிடும். இதற்கிடையே நவீன யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. தொழில்நுட்ப வளர்ச் சிக்கு ஏற்ப, தபால்துறையும் நவீனங்களை புகுத்தி வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன் னதாக பின்கோடு எண் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த தலைமுறைக் கான டிஜிட்டல் பின்கோடை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொருவருக் கும் ஒரு டிஜிட்டல் பின்கோடு வழங்கப்படும். டிஜிபின் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பின்கோடு இருப்பிடத்தில் இருந்து ஜி.பி.எஸ். மூலம் துல்லியமாக இடத்தை கண்டறிந்து பின் கோடு உருவாக்கி கொடுக்கும் வசதியாகும். இது 10 இலக்கங்களை கொண்டது. வீடு, அலு வலகம், தொழிற்சாலை அனைத்திற்கும் டிஜிபின் உண்டு. பின்கோடு என்பது ஒரு பகுதி முழுவதையும் குறிக்கும். ஆனால் டிஜிபின் என்பது குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிக்கும். இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீ தியாக மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த எண் இருக்கும். தபால்துறையின் மூலம் நமக்கான டிஜிபின் எண்ணை உருவாக்க முடியும். செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளின் ஜி.பி.எஸ். வசதியை பயன்படுத்த வேண்டும். இதற்கான செயலியை செல்போ னில் பதிவிறக்கம் செய்து டிஜிபின்கோடு உருவாக்க வேண்டும். நமது இருப்பிடத்தை பொறுத்து உடனடியாக டிஜிபின் எண்ணை உருவாக்கி கொடுக்கும். டிஜிபின்கோடு உருவாக் கத்தால் வழக்கமான பின்கோடுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆன்லைன் மூலம் முகவரி பரிமாற்றம் செய்பவர்களின் வசதிக்காக இந்த டிஜிபின் கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஐதராபாத்தின் ஐ.ஐ.டி. மற்றும் இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி. உதவியுடன் உரு வாக்கப்பட்டுள்ளது. இதனை இணைய வசதி இல்லாமலும் உருவாக்க முடியும் என்பது குறிப் பிடத்தக்கது. டிஜிபின்கோடு 10 இலக்க டிஜிபின்கோடு என்பது. ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களை அடிப்படையாக கொண்டது. ஜியோஹேசிங் என்ற கணித முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2 முறை ஜி.பி.எஸ். கணக்கீட்டை ஒன்றாக மாற்றம் செய்கிறது. இதில் 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் கொண்ட கலவையான கோடிங் ஆகும். இதில் உள்ள முதல் 2 எழுத்துகள் மாநிலத்தை குறிக்கும். அதற்கடுத்து உள்ள ஒற்றை இலக்க எண்கள் அந்த பகுதியில் உள்ள சிறிய துணைப்பகுதியை குறிக்கிறது. கூடுதலாக சேர்க்கப்படும் ஒவ் வொரு எழுத்தும் அந்த இடத்தின் பரப்பளவை துல்லியமாக குறிக்கிறது. 10-வது எழுத்து இருப்பிடத்தை சுற்றிலும் 4 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கான அடையாளமாகும். இந்த கடைசி எழுத்து மட்டும் அனைவருக்கும் மாறுபடும். இந்த கணக்கீடானது படிநிலை அமைப்பை கொண்டுள்ளது. இதனால் அருகருகே உள்ள 2 இடங்கள் ஒரே மாதிரியான முதல் 8 அல்லது 9 எழுத்துகளை பகிர்ந்து கொள்ளும். அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தமட்டில், இந்த கணக்கீடு உயரமான கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு. அலுவலகம் அல்லது கடையும், அந்தக் கட்டிடம் அமைந் துள்ள இடத்திற்காக ஒதுக்கப்பட்ட அதே 10-எழுத்து/எண் கொண்ட அடிப்படை டிஜிபின் குறியீடாக உள்ளது. எடுத்துக்காட்டாக ABCD1234EF FL04-APT402 (டிஜிபின் தளம் அலகு எண்). முகவரிக்கு வர விரும்புபவர்கள் அந்த 10-எழுத்து/எண் கொண்ட அடிப்படை குறியீட்டை பயன்படுத்தி நேரடியாக கட்டிடத்தின் முக்கிய நுழைவுவாயில் அல்லது வரவேற்ப றைக்கு செல்கின்றனர். பின்னர், நீட்டிப்பு குறியீட்டை பயன்படுத்தி இருப்பிடத்திற்கே வர முடியும். இந்த டிஜிட்டல் பின்கோடு முறை நமது இருப்பிடத்தை தேடி வருபவர்களுக்கு எளிதாக காணப்பட்டாலும், மறைமுக ஆபத்தும் உள்ளதாக கூறப்படுகிறது. தகவல் திருட்டு என்பது நவீன கால முறைகேடாக காணப்படும் இந்த வேளையில் நாம் செல்போன் மூலம் இருப்பிடத்தை பிறரிடம் பகிரும்போது பாதுகாப்பானதாக இருக்குமா என் பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த பின்கோடு முறை பயன்பாட்டுக்கு வரும்போதுதான் அது வரமா? அல்லது சாபமா? என்பது தெரியவரும். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா. சென்னை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களில் சந்து, பொந்துகளை தேடி கண்டறிய இந்த டிஜிபின் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/say-goodbye-to-pin-codes-meet-digipin-indias-new-digital-address-system




