பெங்களூரு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோ பெங்களூருவில் வேகமாக பரவியது. ராகுல்காந்திக்கு எதிரான வீடியோவில் ஆபாச கருத்துகளையும் சிலர் பதிவு செய்திருந்தனர். இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பிரிவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட மற்றும் கருத்துகள் பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் காங்கிரசை சேர்ந்த சித்தராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், ஆபாச வீடியோ வெளியிட்டதாக கிரவுண்ட் ரியாலிட்டி இந்தியா என்ற இன்ஸ்டாகிராம் கணக்குதாரர் மற்றும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்ட மேலும் 2 இன்ஸ்டாகிராம் கணக்குதாரர்கள் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் கணக்குதாரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/porn-video-against-rahul-gandhi-case-registered-against-3-people




