சென்னை, பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- பேரறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா! தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-udhayanidhi-stalins-praise-and-salutations



