பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Sint-Gillis-Dendermonde பகுதியில் இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்ணுக்குள் சில நாணயங்கள் போன்ற பொருட்கள் இருப்பதை 18 வயதான Kobe கவனித்துள்ளார். முதலில் அவை சாதாரண ஒரு யூரோ நாணயங்கள் என்றுதான் நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து பார்த்தபோதுதான், அவை தங்க நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு ஏராளமான தங்கப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 49 தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்கத் துண்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ₹98 கோடி எனக் கூறப்படுகிறது. இந்தத் தங்கம் சாதாரணமாக மண்ணுக்குள் கிடக்கவில்லை. பழைய கட்டிடத்தின் பாதாள அறைப் பகுதியிலுள்ள சுவருக்குள் செங்கற்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதையல் கிடைத்ததும் தொழிலாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது தங்கம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதை யார் மறைத்து வைத்தது, எப்போது மறைக்கப்பட்டது, உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/man-finds-rs-98-crore-treasure-during-sewage-work-in-belgium




