திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி மாத பௌர்ணமி திதி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:06 மணிக்கு தொடங்கியது. வார இறுதி விடுமுறை நாட்களோடு பௌர்ணமியும் இணைந்து வந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். விடிய விடிய கிரிவலம் பௌர்ணமி கிரிவலம் தொடங்கியதை அடுத்து, 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் விடிய விடிய பக்தி முழக்கங்களுடன் கிரிவலம் சென்றனர். இன்று (சனிக்கிழமை) இரவு 10:18 மணி வரை பௌர்ணமி திதி உள்ளதால், தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் தரிசனம் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசிப்பதற்காக பொது வழி மற்றும் கட்டண வழி என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சுமார் 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் குடிநீர், கழிவறை மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/purattasi-full-moon-in-tiruvannamalai-devotees-wait-in-long-queues-for-darshan




