சென்னை, மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலக்கட்டத்தைக் குறிக்கும் பெரிமெனோபாஸ் குறித்து நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இது குறித்து நடிகை திரிஷா நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருந்ததாவது: பெரிமெனோபாஸ் என்பது, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் குறைந்து, எதைப் பற்றியும் கவலைப்படாத ஹார்மோன்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலை என்று ஒருமுறை மருத்துவர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். இதை நானே இதைவிடச் சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது” என்று கூறியுள்ளார். பெரிமெனோபாஸ் என்றால் என்ன? மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும் மெனோபாஸ் என்பதை நோக்கி பெண்களின் உடல் நகருவதற்கான தொடக்கக் காலமே பெரிமெனோபாஸ். இந்த காலத்தில் பெண்களின் உடல் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகும். இது பொதுவாக 40-களில் தொடங்கி பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப சில முதல் பல ஆண்டுகள் நீடிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில்தான், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைந்து, மாதவிடாய் சுழற்சி சீரற்று காணப்படும். இதனால் உடல் மட்டுமல்ல, மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். திடீரென ஏற்படும் எரிச்சல் உணர்வு, மனநிலை மாற்றம் போன்றவையும் அறிகுறிகளாக உள்ளன.இதற்கு முன்பு, இதுபற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால், தற்போது மெனோபஸ் மற்றும் மெனேர்பாஸ் முந்தைய காலக்கட்டங்கள் குறித்து மருத்துவர்கள் அதிகம் எடுத்துரைத்து எச்சரிக்கைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/perimenopause-what-women-need-to-know-trishas-post-goes-viral




