சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார். மாமன்ற கூட்டம் நேரமில்லா நேரத்தில் பேசிய அதியமான் முதலில் மாமன்ற கூட்டத்தில் அம்பேத்கர் படம் ஓரமாக மாட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்தார். 'வான் புகழ் கொண்ட வள்ளுவனுக்கு இணையாக அம்பேத்கரின் படத்தை மாட்டி வைத்திருக்கிறோம். நாங்களும் அம்பேத்கரின் வழி வந்தவர்கள்தான்' என்றார். அடுத்ததாக பேசுகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் புகழும் விதத்தில் முதல்வர் விஜய்யை எதிர்த்து பேசினார். 'எந்தத் தலைவனும் தன்னுடைய தொண்டன் சாவதை விரும்பமாட்டான் என பெருந்தன்மையோடு எங்கள் தலைவன் பேசியதால்தான் சிலர் சிறை செல்லாமல் தப்பினர். முதல்வர் சட்டமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார். அப்படி பூட்டி விட முடியுமா? அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அரங்கம். அதை முதல்வர் மூடிவிடுவாரா? அப்படி மூடினால் 5-6 ஆர்த்தோ டாக்டர்களுடன்தான் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும். அதியமான் ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் விதமாக நம்முடைய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களில் அவரின் சாயம் வெளுத்துவிட்டது. அரசு ஊழியர்களின் சுதந்திரமே பறிபோய் விட்டது. 500 ரூபாயை சட்டைப் பையில் வைத்திருந்தால் அந்த 500 ரூபாய் எப்படி வந்தது என கேட்கிறார்கள். அரசு ஊழியர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/well-have-to-run-the-assembly-with-orthopaedic-doctors-dmk-councillor-warns-chief-minister-over-rising-tensions




