Vollständiger Artikel
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் இயங்கி வருகிறது தீவட்டிப்பட்டி காவல் நிலையம். ஆய்வாளர் இல்லாத நிலையில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆடு ஒன்றை பலியிட்டு அதன் ரத்தத்தை ஸ்டேஷன் சுவர்களில் தெளித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். தெளிக்கப்பட்ட ஆட்டு ரத்தம் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஸ்டேஷன் காவலர் ஒருவர், "தீவட்டிப்பட்டி ஸ்டேஷன் லிமிட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்றங்கள் குறைய வேண்டும் என வேண்டுதல் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் ஸ்டேஷன் வாசலிலேயே கிடா வெட்டி பலியிடப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு, கிடாயின் ரத்தத்தை ஸ்டேஷனைச் சுற்றி தெளிக்கப்பட்டது. பலியிடப்பட்ட கிடாயை பக்கத்தில் உள்ள சிக்கன் சென்ட்டரில் கொடுத்து சமைத்து காவலர்கள் அனைவரும் சாப்பிட்டோம்" என்றார். குற்ற செயல்களை தடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையினர் குற்றங்களை குறைக்க வழிபாடு நடத்துகிறோம் என்கிற பெயரில் ஆட்டை பலியிட்டு ரத்தத்தை ஸ்டேஷன் சுவர்களில் தெளித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




