தூத்துக்குடி, தூத்துக்குடியில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கார் தொழிற்சாலையில் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள் தூத்துக்குடி 3-ம் மைல் அருகே திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த ஒரு கார் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 4 பைக்குகளில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை அந்த வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள வீட்டின் மீது எரிந்துவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டின் கண்ணாடிகள் உடைந்தும், வெளியில் இருந்த துணிகள் தீயில் கருகியும் சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் மற்றும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-hurled-at-house-of-northern-state-workers-in-thoothukudi




