தூத்துக்குடி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆவணி திருவிழா திருச்செந்தூரில் இன்று கொடியேற்றத்துடன் கோலாகமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில் திரலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வருகிற 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான திருச்செந்தூர் ஆவணி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/aavani-festival-begins-at-thiruchendur-murugan-temple-with-the-flag-hoisting-ceremony




