நெல்லை, முன்விரோதம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள்பாண்டியன் குடும்பத்திற்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து (வயது 40) என்பவர் தனது மகன்களான சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே உள்ள மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர். கொடுர கொலை காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோத விட்ட கும்பல், காளிமுத்துவை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது. கார் மோதியதில் சிறுவன் ஜெயராஜ் உயிரிழந்தான். மர்மநபர்கள் சிறுவன் சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த மகேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு இந்த நிலையில், நெல்லை இரட்டை கொலை வழக்கில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்தை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இடதுகாலில் காயமடைந்த அஜித் மற்றும் வெட்டுக்காயம் அடைந்த காவலர் பரமசிவம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-double-murder-one-person-shot-and-arrested




