ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் பிரித்வி ராய்-கிருஷ்ண பிரசாத் இணை மலேசியாவின் மான் வெய் சோங்-சோக் யூய் யிகி ஜோடியிடம் தோற்று வெளியேறியது. அசன், கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் அசன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் கால்இறுதியில் உலக தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சரிவில் இருந்து மீண்டு 20-22, 21-5, 21-19 என்ற செட் கணக்கில் தரநிலையில் 22-வது இடத்தில் உள்ள ஹினா அகிசிக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 63 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 49-வது இடம் வகிக்கும் ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் 30-வது இடத்தில் உள்ள சக நாட்டு வீராங்கனை தன்வி ஷர்மாவை சாய்த்து அரைஇறுதியை எட்டினார். கடந்த வாரம் தைபே ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற தன்வி ஷர்மாவுக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் ரக்ஷிதா தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷிதா அரைஇறுதியில் அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார். ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் பிரித்வி ராய்-கிருஷ்ண பிரசாத் இணை 7-21, 8-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் மான் வெய் சோங்-சோக் யூய் யிகி ஜோடியிடம் தோற்று வெளியேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/korea-masters-badminton-ashmita-and-rakshitha-set-up-all-indian-semifinal




