பெங்களூரு, 4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். தொடக்க நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் தலைமையிலான அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 10-8 என்ற கணக்கில் மும்பை மாஸ்டர்சை வீழ்த் தியது. பைபர்ஸ் அணியில் விதித் குஜராத்தி, கோனெரு ஹம்பி வெற்றியை தேடித்தந்தனர். கார்ல்சென்- மேக்சிம் வச்சியர் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. 2 முறை சாம்பியனான திரிவேணி கான்டினென்டல் அணி 9-10 என்ற கணக்கில் கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்சிடம் தோல்வியை தழுவியது. இன் னொரு ஆட்டத்தில் அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணி 10-4 என்ற கணக்கில் அலாஸ்கன் நைட்சை வென்றது. 2-வது நாளான இன்று போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/global-chess-team-carlsen-wins




