சென்னை, ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வரும் அக்டோபர் 1 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டு வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்.கருவி பொருத்த வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி, அதனை 'MiMaS Portal' செயலியுடன் இணைப்பதற்கு முன்னதாகக் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டத்தில் இதுவரை சுமார் 12 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி, அவற்றை 'MiMaS Portal' செயலியில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வரும் அக்டோபர் 1 (01.10.2026) முதல் கனிமங்கள் எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டு (Pass) வழங்கப்படும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்களது வாகனங்களில் கட்டாயமாக ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி 'MiMaS Portal'-ல் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gps-equipment-to-be-fitted-to-vehicles-carrying-minerals




