வாஷிங்டன் கிரகணம் பார்க்க விடாமல் பிகினி உடையில் மறைத்தபடி நின்ற பிரபல நடிகையை, ஜோக் அடித்து நடிகர் கலாய்த்தது வைரலாகி வருகிறது. பிரபல கவர்ச்சி மாடல் அழகி மற்றும் பெண் தொழிலதிபரான கேத்தி பிரைஸ் சூரிய கிரகணம் நிகழ்வை ஒட்டி விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது, இபிசா நகரில் கடற்கரையோரம் அதன் அழகை ரசித்தபடி வெய்னே லைன்கர் என்ற தொழிலதிபருடன் பொழுதுபோக்கினார். சூரிய குளியல் வெய்னே சூரிய குளியல் எடுத்தபடி சாய்வாக படுத்திருந்தபோது, அவருக்கு குறுக்கே கருப்பு நிறத்திலான, பிகினி உடையுடன் முன்னே வந்து கேத்தி குனிந்து நின்றார். இதனால், வெய்னேவின் கவனம் பிரைசை நோக்கி சென்றது. அப்போது, சூரிய கிரகணம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அதனை பார்க்க முடியாதபடி கேத்தி மறைத்து கொண்டு நின்றார். கருப்பு நிற பிகினி கருப்பு நிற பிகினியுடன், சூரியன் தெரியாதபடிக்கு அதனை மறைத்தபடி கேத்தி நின்றதும், வெய்னே உடனே, அடக்கடவுளே, சூரியனுக்கு என்ன ஆனது? என கேட்டார். அதற்கு கேத்தி, வெள்ளை சாக்லேட்டே. நீங்கள் கரைந்து போக நான் விரும்பவில்லை என்று கூறினார். சூரிய ஒளியில் வெய்னே கரைந்து போக கூடாது என்ற எண்ணத்தில் இதனை அவர் கூறினார். ஆனால், சூரியனை காண விடாமல் கேத்தி மறைத்தது மற்றும் சூரிய கிரகணம் ஆகிய 2 விசயங்களையும் குறிக்கும் வகையில் வெய்னேவோ, கேத்தி பிரைசிடம், என்ன 3 சூரிய கிரகணம் தெரிகிறதே? என சிரித்து கொண்டே கேட்டார். இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சூரிய கிரகணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கரோனா' மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும். விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், நேற்று நிகழ்ந்தது. ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் உள்பட இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய கிரகணம் நடைபெற்றது. இதனால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/what-3-solar-eclipses-are-seen-actor-mocks-famous-actress-standing-in-bikini




