ஆலந்தூர், சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் நந்த கோபால். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கவரை வாங்கிக்கொண்டு இருவரும் 1-வது முனையம் வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது டிப்டாப் வாலிபர் ஒருவர், அவர்களை நிறுத்தி, நான் சுங்கத்துறை அதிகாரி. இந்த கவரில் கடத்தல் தங்க நகை இருக்கிறது. எனவே அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நந்தகோபால் கையில் வைத்திருந்த கவரை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு, என்னை பின்தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு அந்த நபர் வேகமாக சர்வதேச முனையம் நோக்கி சென்றார். சுங்க அதிகாரி பின்னர் அவர் மாயமாகி விட்டார். அந்த கவரில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் விசாரித்தபோது மர்மநபர் சுங்க அதிகாரி போல் நடித்து நகை இருந்த கவரை பறித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்தின் உள்ளேயே மர்ம நபர் சுங்க அதிகாரி போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-heist-man-pretends-to-be-a-customs-officer-and-flees-with-12-pounds-of-jewelry




