சேலம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜய் தான் களவாணி முதல்-அமைச்சர் விஜய் கரூர் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கூறினார். அவர் வகிக்கும் பதவியில் இருந்து இவ்வாறு பேசுவது அழகல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. இறவல் கால் தமிழகத்தில் 60 நாள் த.வெ.க. ஆட்சியில் செய்தது என்ன. ஒன்றும் செய்யவில்லை. 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய் நாற்காலியின் ஒரு கால் இறவல் கால். வேறு கூட்டணியில் வென்றவர்கள் தான் த.வெ.க.வுக்கு உறுதுணையாக உள்ளனர். கட்டுக்கதை தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கதை. தீயசக்தி தி.மு.க. என்பதுதான் எனது நிலைப்பாடும். தி.மு.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-who-poaches-aiadmk-mlas-is-a-thief-remarked-edappadi-palaniswami-sharply




