மும்பை, நாக்பூர்-மும்பை இடையே இயக்கப்படும் அதிவேக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் நோக்கி வந்துகொண்டு இருந்தது. இரவு 8.30 மணி அளவில் நாக்பூர்-வார்தா வழித்தடத்தில் உள்ள போர்கேதி மற்றும் சிந்தி ரெயில்நிலையங்களுக்கு இடையே வந்தபோது, மர்மநபர்கள் இந்த ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கற்கள் 2 ஏ.சி.' பெட்டி ஒன்றின் மீதும் மற்றும் '3 ஏ.சி.'யின் 2 பெட்டி கள் மீதும் தாக்கின. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கற்கள் பெட்டிக்குள் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/stones-thrown-at-moving-train-railway-police-investigating




