‘சிக்மா’ திரைப்படத்தை முதல்-அமைச்சர் விஜய் பார்க்க வேண்டும் என நடிகர் சந்தீப் கிஷன் கோரிக்கை வைத்துள்ளார். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் பரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் வருகிற 2ந் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பாடல்கள் வைரல் இதற்கிடையில், இந்த படத்திலிருந்து ‘சிக்மா ஸ்டைல்’, ‘அய்யய்யோ அம்மாடி’, ‘ரேஜ் ஆப் சிக்மா’, ‘சுலோச்சனா’ ஆகிய பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ‘சுலோச்சனா’ பாடலில் சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளார். புரமோஷன் நிகழ்ச்சி இந்த படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். ‘சிக்மா’ படத்தை முதல்-அமைச்சர் பார்க்க கோரிக்கை வைத்த சந்தீப் கிஷன் இந்த நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சந்தீப் கிஷன், “இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல் திரைப்படம் போல் இல்லாமல் நேர்த்தியான பெருமைப்படும் படமாக சிக்மாவை இயக்கியுள்ளார். இப்படத்தை முதல்வர் விஜய் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள்? ஆக்சன் மட்டுமல்லாமல் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன” எனதெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/cm-vijay-should-watch-the-movie-sigma-sundeep-kishan




