புதுடெல்லி, டெல்லி-காசியாபாத் ரெயில் வழித்தடத்தில் இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. உடனே அங்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயில் சேவைகள் பாதிப்பு சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வடக்கு ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யாய் கூறும்போது, மூத்த அதிகாரிகளுடன் கோட்ட ரெயில்வே மேலாளரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை. மொத்தம் 53 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன அல்லது பகுதியளவு ரத்து செய்யப்பட்டன என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/goods-train-derails-on-delhi-ghaziabad-route




