சென்னை: சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 22 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 23-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2004-ல் தொடங்கிய பயணம் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி தனது பயணத்தை தொடங்கியது. தொடங்கப்பட்ட நாள் முதல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளின் முக்கிய ரெயில் சேவையாக பொதிகை எக்ஸ்பிரஸ் இருந்து வருகிறது. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது. மின்சார ரெயிலாக மாற்றம் பொதிகை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட காலத்தில் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 12661 மற்றும் 12662 என்ற ரெயில் எண்களில் சென்னை–செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. 23-வது ஆண்டில். 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பொதிகை எக்ஸ்பிரஸ், 23-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி ரெயில் பயணிகள் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/from-chennai-to-sengottaipodhigai-express-marks-its-23rd-year




