பருப்பு போளி, தேங்காய் போளி சாப்பிட்டிருப்பீர்கள். வித்தியாசமாக இன்று வேர்க்கடலை பூர்ணம் வைத்து சுவையான போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; பச்சை வேர்க்கடலை - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - 1 டீஸ்பூன், மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 கப், மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை; முதலில் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை நன்றாக வேகவைத்து, ஆறியதும் மசித்துக்கொள்ளவும். மசித்த கலவையுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வேர்க்கடலைக் கலவையைச் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். கலவை ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். மாவில் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் மற்றும் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து தளர்வாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிரிக்கவும். மாவு உருண்டைக்குள் வேர்க்கடலைப் பூர்ண உருண்டையை வைத்து மூடி, பிளாஸ்டிக் கவரில் வைத்து போளியாகத் தட்டிக்கொள்ளவும். சூடான தவாவில் போளியைப் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான வேர்க்கடலை பூர்ணம் போளி தயார். சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/verkkadalai-poornam-poli-seyvathu-eppadi




