சென்னை, தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். தனக்கு கடந்த சில மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும். கல்லூரியிலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து அரசை வலியுறுத்தினர். இது குறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன? கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள். உறுதுணை அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது. என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் தளபதி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-support-student-bharathidasans-education-kanimozhi




