கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருக்கு எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன். சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/additional-responsibility-for-kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh




