‘தி பாரடைஸ்’ படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் மூலம் சிலவற்றை கற்றுக் கொண்டேன் என்று நடிகர் நானி கூறியுள்ளார். ‘தி பாரடைஸ்’ நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகி கயாடு லோஹர் அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது. இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புப் பாடலில் கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது. முதல் நாள் வசூல் ரூ.88 கோடி நானி நடித்த ‘தி பாரடைஸ்’ படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளது. ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து வசூல் சாதனையை இந்த படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் நானி உருக்கம் ‘தி பாரடைஸ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் நானி பதிவிட்டுள்ளார். அதில் “தி பாரடைஸ் குறித்த உங்களின் விமர்சனங்களை நான் பார்த்தேன். உங்களின் டிரோல்களை நான் ரசித்தேன். இந்த படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் மூலம் சிலவற்றை கற்றுக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் நன்றி. இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதற்காக ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி எடுக்கப்பட்டது. கொண்டாடுவதும், விமர்சிப்பதும் உங்கள் விருப்பம். நன்றியுணர்வால் என் இதயம் நிறைந்துள்ளது” என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-enjoyed-the-critical-trolls-of-the-film-the-paradise-actor-nani




