தூத்துக்குடி, தூத்துக்குடியில் ரூ.17 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. மாலத்தீவுக்கு கடலில் கடத்த கேரளாவில் இருந்து காரில் அதை கொண்டு வந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கண்காணிப்பு கேரளாவில் இருந்து தூத்துக்குடி வழியாக மாலத்தீவுக்கு 'ஆசீஷ்' ஆயில் எனப்படும் போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பந்தப்பட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதி வழியாக வந்த ஒரு காரை மடக்கினர். அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர் காலனியை சேர்ந்த ரெனிஸ்டன் (வயது 53), தெப்பக்குளம் தெருவை சேர்ந்த ரொசாரியோ (40), சுனாமி காலனியை சேர்ந்த சேர்மதுரை (46), கிரகோப் தெருவை சேர்ந்த அந்தோணி லிபிடஸ் (36) என்பது தெரியவந்தது. சோதனை காரில் சோதனை செய்தபோது. 17 கிலோ எடையுள்ள 'ஆசீஷ்' ஆயில் என்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.17 கோடி ஆகும். இந்த போதைப்பொருள் கஞ்சா செடியின் இலைகள், பூக்களில் இருந்து பிசின் போன்ற நுண்துகள்களை பிரித்து. அதனை ஒன்றாக சேர்த்து அழுத்துவதன் மூலம் அல்வா போன்று தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பறிமுதல் காரில் இருந்த 17 கிலோ போதைப்பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் கேரளாவில் இருந்து போதைப்பொருளை காரில் தூத்துக்குடிக்கு கடத்தி வந்துள்ளனர். இங்கிருந்து கடல் வழியாக படகில் மாலத்தீவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு ரெனிஸ்டன் உள்பட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் காரையும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-smuggling-plan-to-maldives-by-boat-drugs-worth-rs-17-crore-seized-in-thoothukudi




