லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவில் கட்டிட சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை நிலநடுக்கம் லே பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. காலை 6.05 மணி 15 வினாடிகளிலநிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் ஏற்படும் வாய்ப்பு இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஆழம் குறைவாக ஏற்படும் நிலநடுக்கங்களால் பூமியின் மேற்பரப்பில் அதிர்வு அதிகமாக உணரப்படும்.இதுபோன்ற நிலநடுக்கங்களில் நில அதிர்வு தாக்கங்கள் பூமியின் மேற்பரப்பை குறைந்த தூரத்திலேயே சென்றடைவதால், கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் கண்காணிப்பு எனினும், லே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.லடாக் மற்றும் இமயமலைப் பகுதிகள் நில அதிர்வு ஏற்படக்கூடிய பகுதிகளாக இருப்பதால், அடுத்தடுத்த அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/55-magnitude-earthquake-strikes-ladakhs-leh




