நடிகை ஜோதிகா இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் பரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் வருகிற 2ந் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாக உள்ளது. புரமோஷன் நிகழ்ச்சி இந்த படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தமன் இசையமைப்பில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக ‘சிக்மா’ நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெற்றிக்கு தகுதியானவர் ஜேசன் சஞ்சய் இந்த நிலையில், நடிகை ஜோதிகா ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிக்மா படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலைப் பார்க்கும் போது பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியைத் தருகிறார். நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றிக்குத் தகுதியானவர் என தெரிகிறது. உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். உங்களின் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்." என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jason-sanjay-deserves-to-win-actress-jyothika



